அந்நிய செலாவணி என்றால் என்ன?

அந்நிய செலாவணி என்றால் என்ன?

 அந்நிய செலாவணி என்றால் என்ன?

அந்நிய செலாவணி வர்த்தகத்தை FX என்றும் கூறலாம். Forex Trading(அந்நிய செலாவணி வர்த்தகம்) என்பது ஒரு நாட்டின் நாணையத்தின் மதிப்பில் மற்றொரு நாட்டின் நாணயத்தை வாங்கலாம் அல்லது விற்கலாம். இது பெரும்பாலும் சுற்றளவுக்கு செல்லும் பயணிகளிடமும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் அதிக அளவு இந்தவகை பரிமாற்றங்கள் செகின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அரசும் அந்நிய செலாவணியை கையிருப்பு வைத்துக்கொள்கின்றார்கள். மேலும் இது தினசரி வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு ஒவ்வொரு நாட்டின் நாணையத்தையும் மற்றொரு நாட்டின் நானைய மதிப்பில் வர்த்தகம் செய்கிறார்கள்.

அந்நிய செலாவணி வர்த்தகம் இந்தியாவில் சட்டபூர்வமானதா

அந்நிய செலாவணி சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாகும், ஒவ்வொரு நாளும் பல டிரில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் கை மாறுகிறது, அந்நிய செலாவணி சந்தை என்பது வங்கிகள், தரகர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகர்களின் இனையம் வாயிலாகச் செய்யப்படுகிறது. குறிப்பாகப் பெரும்பாலும் தரகர்கள் அல்லது வங்கிகள்மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் INR ஜோடிகளை நீங்கள் வர்த்தகம் செய்யலாம்.

 அந்நிய செலாவணி சந்தை:

அந்நிய செலாவணி சந்தையைப் பொறுத்தவரையில் வர்த்தகம் செய்யும்போது இரண்டடு நாணயங்களை ஒப்பிட்டுத் தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதாவது AUD / CAD, EUR / USD, அல்லது USD / INR போன்ற ஜோடிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பாக USDINR என்று சொன்னால் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு நிகரான அமெரிக்க டாலரை வாங்கலாம் அல்லது விற்கலாம். உதாரணமாக 1 அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் RS.75 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் 10 அமெரிக்க டாலரை RS.750 ரூபாய் வைத்திருந்தால் வாங்கலாம். நாணைய வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் வாங்கும்போது ஒரு விளையும் விற்கும்போது மற்றோரு விலையில் குறிப்பிடுவார்கள்.

EURUSDயில் நீங்கள் வர்த்தகம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், தற்போதைய EURUSD 1.1821 என்ற நிலையில் வர்த்தகம் நிலவுகிறது எனில், நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை வாங்குவதற்கு 1.1821 EUR செலவு செய்ய வேண்டும் என்று அர்த்தமாகும், இது ஒரு உதாரணம் மட்டும் ஏனெனில் நானையை ஜோடிகள் முன்பின் வருவதை வைத்தது இது மாறுபடலாம்.
அந்நிய செலவாணி சந்தையின் சிறப்பு:

  1. அந்நிய செலாவணி சந்தை உலக அளவில் பெரியது ஆகும்.
  2. ஒவ்வொரு நாளும் பல ட்ரில்லியன் வர்த்தகம் நடைபெறும் சந்தை இதுவாகும்.
  3. இதற்க்கு லண்டன், நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் டோக்கியோ ஆகியவை மிகப்பெரிய வர்த்தக மையங்கள் இருக்கிறது.
  4. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் அந்நிய செலாவணி சந்தை திறந்திருக்கும்(திங்கள் முதல் வெள்ளி வரை).
  5. குறைவான பணத்தினை கொண்டு எளிமையாக வர்த்தகம் தொடங்கலாம்.

எவ்வாறு அந்நிய செலவாணி வர்த்தகம் செய்வது:

இந்தியாவில் அன்னிய செலாவணி வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால் செபி மூலம் அனுமதி பெற்று இருக்கும் தரகர்களிடம் நீங்கள் டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும். இவற்றில் இந்திய ரூபாய்க்கு நிகரான ஒரு சில நாணயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றின் மூலம் நீங்கள் வர்த்தகம் செய்து கொள்ள முடியும். ஆனால் அமெரிக்க நாணயங்கள் மற்றும் மற்ற நாடுகளின் நாணயங்களைக் கொண்டு அந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் பாரக்ஸ் டிரேடிங் செய்ய வேண்டும். 
இந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்வதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அந்நிய செலாவணி வர்த்தகதிற்காகச் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் பண போக்குவரத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதாயங்கள் கிடைக்கிறது. இதனால் வெளிநாட்டு அரசுக்கு மட்டும் வருமான வரி போன்ற வரிகளும் கிடைத்து அந்த நாடுகளின் பொருளாதாரம் மேம்படுகிறது. 

Octafx:

இந்தியாவில் இருப்பவர்கள் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய வேண்டுமென்றால், OctaFX  என்ற நிறுவனத்தின் மூலம் கணக்கினைத் தொடங்கி அதன் மூலம் நீங்கள் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த நிறுவனத்தின் மூலம் ஏற்படும் லாப நஷ்டத்துக்கு இந்திய அரசு மற்றும் உங்களது வங்கிகளும் எந்தவகையிலும் பொறுப்பாகாது.
Share