பங்கு சந்தை என்றால் என்ன? (Learn Stock Market in Tamil)

பங்கு சந்தை என்றால் என்ன? (Learn Stock Market in Tamil)

பங்குச்சந்தை என்றாலே அதில் நஷ்டம் ஏற்படும் என்று காலம் சென்று தற்போதைய காலகட்டத்தில் பங்குச்சந்தையில் அனைவரும் முதலீடு செய்வதற்கு தயாராகி விட்டனர். இருந்தபோதிலும் பெரும் பணக்காரர்களும் மற்றும் தொழிலதிபர்களும் மட்டுமே அதிக அளவில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இந்தப்பதிவில் மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும் சாதாரண தொழிலாளி கூடப் பங்குச்சந்தையில் முதலீடு எவ்வாறு செய்வது என்று பார்க்கப் போகிறோம். பங்குச்சந்தை என்று சொன்னாலே ஒரு சிலருக்கு பயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அவற்றை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று தெரிந்து கொண்டால் நாமளும் ஒரு சிறந்த முதலீட்டாளராக உருவாகலாம். பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதை பார்ப்பதற்கு முன்பு பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

tamil capital

பங்குச்சந்தை என்றால் என்ன?

பங்குச்சந்தை என்பது பொது நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் இருப்பதற்கான பொதுவான ஒரு இடமாகும். இந்திய பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட 1600க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இடம்பெற்றிருக்கிறது, இவற்றில் நீங்கள் விருப்பப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை உங்களால் வாங்கவும் மற்றும் விற்கவும் முடியும்.

பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது?

உங்களுக்கு மிக எளிதாகப் புரியும்படி கூற வேண்டும் என்றால்? நான் Tamil Capital என்ற நிறுவனத்தைத் நடத்தி வருகிறேன் என்று வைத்துக்கொள்வோம். எனது நிறுவனம் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் மூன்று நான்கு கிளைகள் இயங்கி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் எனது நிறுவனத்தை இன்னும் பெரிய நிலைக்குக் கொண்டு செல்வதற்காக நான் முயற்சி செய்கிறேன். இதற்காக எனக்கு நூறு கோடி ரூபாய் தேவைப்படுகிறது ஆனால் என்னிடம் இருப்பதோ 20 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். மேலும் உள்ள 80 கோடி ரூபாயை ஒரு வங்கியிடமிருந்து பெற முடியும் அல்லது மற்றொரு தொழில் பார்ட்னரை சேர்த்துக்கொள்ள முடியும். பெரும்பாலும் யாரும் தொழில் பார்ட்னரை சேர்த்துக் கொள்வதற்கு முன்வருவதில்லை, மேலும் வங்கியிடம் தொழிலை முன்னேற்றுவதற்கு கடன் வாங்கும்பொழுது அதற்கான வட்டியும் அதிகமாக இருக்கிறது, எனவே வங்கியிடமிருந்து தொழில் கடனும் வாங்க முடியாது.

நீங்கள் வங்கியில் தொழில் கடன் பெறும்பொழுது குறிப்பிட்ட காலம் வந்தவுடன் நீங்கள் வாங்கிய கடனையும் கட்ட வேண்டும், அது மட்டுமில்லாமல் அதற்கான வட்டியையும் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இதற்குப் பதிலாக நான் பங்குச்சந்தைக்கு எனக்கு நிறுவனத்தை எடுத்துச் செல்ல முடியும். நான் வங்கியில் கடன் வாங்கும்பொழுது கடன் தொகை மற்றும் கடன் தொகை காண 10 சதவீதத்திற்கும் மேலான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும். ஆனால் நான் பங்குச்சந்தைக்கு எனது நிறுவனத்தை எடுத்துச் செல்லும்பொழுது எனது நிறுவனத்தையும் மேம்படுத்த முடியும், அது மட்டுமில்லாமல் நான் சம்பாதிக்கும் பணத்தை நான் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். 

எவ்வாறு நிறுவனத்தைப் பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வது?

ஏற்கனவே எனது நிறுவனத்தைப் பற்றிய கருத்துக்கள் மக்களுக்கு நல்ல விதமாக இருக்கிறது, மேலும் தொடர்ந்து எனது நிறுவனம் நன்றாக இயங்கி வருகிறது என்று வைத்துக் கொண்டால் நான் தாராளமாகப் பங்குச்சந்தைக்கு எனது நிறுவனத்தை எடுத்துச் செல்ல முடியும். இந்திய பங்குச்சந்தையில் NSE மற்றும் BSE என்ற இரண்டு முக்கிய பங்குப் பரிவர்த்தனைகள் இருக்கிறது, எனது நிறுவனத்தை இந்த இரண்டு பங்கு பரிவர்த்தனைகளுக்குக் கொண்டு சென்று மகிளிடம் நேரடியாக மூலதனத்தை பெற முடியும்.

Securities and Exchange Board of India(SEBI)ஆனது பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது, நான் பங்குச்சந்தைக்கு எனது நிறுவனத்தைக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் முதலில் செபியில்(SEBI) அனுமதி பெற வேண்டும், ஒரு நிறுவனம் இந்திய பங்குச் சந்தைக்கு நுழைய வேண்டுமென்றால் செபி கூறியிருக்கும் ஒரு சில நிபந்தனைகளைக் கடைபிடித்து இருக்க வேண்டும். உதாரணமாக உங்களது நிறுவனம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வர வேண்டும் என்று வைத்துக்கொள்ளவோம். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் உங்களது நிறுவனம் பெரிய நஷ்டம் எதுவுமின்றி சிறந்த வருவாயை ஈட்டி வர வேண்டும். உங்களது நிறுவனம் செபியில் அனுமதி பெற்ற உடன் உங்களது நிறுவனத்தின் பெயரில் IPO வெளியிடப்படும்.

IPO என்றால் என்ன?

IPO என்பது  initial public offering எனப்படும். அதாவது முதல் முறை பங்குச்சந்தைக்கு ஒரு நிறுவனம் வரும்பொழுது பொதுமக்களுக்காக முதன்முதலில் வெளியிடப்படுகிறது இதற்காக இதனை IPO என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதனை முதன்மை சந்தை என்றும் கூறலாம். ஏற்கனவே உங்களது நிறுவனத்தைப் பற்றி நல்ல கருத்து இருப்பவர்களும் அல்லது புதிய நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் இந்த IPOவை வாங்குவார்கள். முன்பு சொன்னது போல் நீங்கள் வங்கியில் 80 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு பதிலாக இங்கு வட்டியில்லாத கடன் பெற முடியும். உங்களது 80 கோடி ரூபாயை காண மூலதனத்தை ஐபிஓ வாங்க நினைக்கும் அனைவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும். இதன் மூலம் நேரடியாக மக்களிடம் மூலதனத்தை திரட்டி எனது நிறுவனத்தின் நான் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

எனது நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டது ஐபிஓ ஆனது ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டும் இருக்கும், அதன் பிறகு இரண்டாம் நிலை சந்தையான பங்குச்சந்தைக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படும். உதாரணமாக எனது நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், ஏற்கனவே 100 ரூபாய் கொண்டு முதன்மைச் சந்தையில் IPO வாங்கி வைத்திருப்பவர்கள் இரண்டாம் நிலை சந்தையில் அவற்றை லாபத்தில் விற்பதற்கு முயற்சிப்பார்கள். அதாவது நூறு ரூபாய் விலையில் 500 பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் ஐந்து ரூபாய் லாபத்தில் அவற்றை விற்கும்பொழுது 2500 ரூபாய் லாபம் கிடைக்கும். இதே நேரத்தில் ஏற்கனவே பங்குச் சந்தையில் இருக்கும் மற்ற சில நபர்கள் இந்த நிறுவனத்தின் வரவுச் செலவு மற்றும் வருவாயைக் கணக்கில் கொண்டு வருங்காலத்தில் இந்த நிறுவனம் மேலும் முன்னேற்றம் அடையும் என்று இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் வருவார்கள்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டிமாண்ட் அதிகமாகும். முன்பு சொன்னதுபோல ஏற்கனவே ஒருவர் 100 ரூபாய் என்றால் விலையில் 500 பங்குகளை வாங்கி அவற்றை 105க்கு விற்கிறார் என்றால் புதிதாக முதலீடு செய்ய வருபவர் 105 ரூபாய் கொடுத்து 500 பங்குகளை வாங்குவார். இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டு கணக்கு வழக்கும் முடிவுகள் லாபத்தை மட்டும் கொடுக்கும்பொழுது, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக அதிகமான நிறுவனங்களும் அதிகமான மக்களும் முன்வருவார்கள். இதன் மூலம் இந்த நிறுவனத்தின் மூலதனம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பங்கு விலை ஏற்றம் இறக்கங்கள்:

ஒரு நிறுவனத்தின் பங்கு விலைகள் தேவை இல்லாமல் இறங்கவோ அல்லது  ஏற்கவோ முடியாது. முன்பு சொன்னது போல 100 ரூபாயில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அவற்றை நூற்றி ஐம்பது ரூபாயில் விற்பனை செய்யக் காத்திருக்கும் ஒரு தரப்பினர் பங்குச்சந்தையில் இருப்பதைப் போல, வருங்காலத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு புதிதாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களும் இருப்பார்கள். இதனால் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலைகள் எப்போதும் மாற்றத்துடன் காணப்படும்.

Share