31.1 C
Salem
Saturday, July 2, 2022

பங்கு சந்தையில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது?

பங்கு சந்தையில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது?

பங்கு சந்தையில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது என்ற எண்ணம் அனைவரிடத்திலும் தோன்றும், ஒரு சிலருக்கும் இது பயத்தையும் ஏற்படுத்தும் இதற்கான காரணம் இதில் சாதித்தவர்களை காட்டிலும் இதனால் தங்களது வாழ்க்கையை இழந்தவர்கள் தான் நம் அருகில் இருப்பார்கள். இவர்கள் நம்மிடம் கூறிவைத்திருப்பது என்னவென்றால் பங்குசந்தையில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது அதுமட்டுமில்லாமல் இது ஒரு சூதாட்டம் என்பதும் உண்டு. இந்தப் பதிவில் சாமானியர்களுக்கு பங்குசந்தையில் வர்த்தகம் செய்து எளிதாகச் சம்பாதிப்பது எப்படி என்றுதான் பார்க்க இருக்கிறோம்.

பங்கு சந்தையில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது?

பங்குச் சந்தை என்றால் என்ன?

உங்களுக்கு எளிதாகப் புரியும்படி கூற வேண்டும் என்றால் பங்குச் சந்தை என்பது பங்குகளை வாங்கவும் விற்கவும் இருக்கும் பொதுவான இடம் ஆகும், இங்கு உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்பப் பங்குகளைத் தேர்வு செய்து வாங்கவும் விற்கவும் செய்யலாம். இதனால் பங்குச் சந்தையை ஆங்கிலத்தில் Stock Market, Share Market, Equity Market என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இங்கு நீங்கள் பங்குகள், பொருட்கள் வர்த்தகம், நாணையங்கள், குறியீடுகள் போன்றவற்றில் வர்த்தகம் மேற்கொள்ளலாம்.

பங்கு சந்தையில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது என்ற கேள்விக்குச் சிறந்த பதில்கள் இதோ, இங்கு 18வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் பங்குகளை வாங்கலாம் மற்றும் அதேபோல விற்கவும் செய்யலாம். எடுத்துக்காட்டாக உங்கள் அருகாமையில் இருக்கும் உழவர் சந்தையில் மூன்று நபர்கள் முக்கியமாகச் செயல்படுவார்கள். விவசாயிகள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் இவர்கள் சேர்ந்தால் மாட்டும் தான் அந்த உழவர் சந்தை செயல்படும். விவசாயிகள் என்பவர்கள் அவர்களிடம் உள்ள காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்பி வைப்பார்கள், அங்குள்ள விற்பனையாளர்கள் கூடுதல் அல்லது அரசு நிர்ணயித்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதனை விர்ப்பார்கள். இங்கு வாடிக்க்கையாளர் என்பவர் காய்கறிகளைப் பேரம் பேசி வாங்குவார்கள்.

இதே போன்று தான் பங்கு சந்தையில் தங்களது முதலீட்டைப் பெருக்கவரும் பொது நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என மூன்று முக்கிய நபர்கள்மூலம் பங்குச் சந்தை தினசரி செயல்படுகிறது. Demat Account வைத்திருப்பவர்கள் அனைவரும் வாங்கி விற்கலாம்.

எதில் வர்த்தகம் செய்வது?

1.பங்கு வர்த்தகம்:

இதில், பொதுவில் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் மற்றும் விற்கவும் செய்யலாம். அந்த நிறுவங்களின் ஒட்டுமொத்த முதலீடு மற்றும் லாபத்தை பொறுத்து அதன் விலை உயரும் அல்லது இறங்கும், நீங்கள் ஒவ்வொரு முறை வர்த்தகம் செய்யும் போதும் சரியான நிறுவனத்தைத் தேர்வு செய்வது அவசியமாகும், உதாரணமாக Tata Motors நிறுவனம் கடந்த 12மாத காலங்களில் அவர்களின் தயாரிப்புகளை விற்று நல்ல லாபம் அடைந்துள்ளார்கள் அதுமட்டும் இல்லாமல் சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் அதிகமான விற்பனை நடைபெற்றுள்ளது என்று வைத்துக்கொள்ளவோம், இந்த நிலையில் Tata Motors செலவைவிட வரவு அதிகரித்துள்ள காரணத்தால் பலரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள், இதனால் இதன் பங்கு விலை கணிசமாக உயரும் இதனைப் பயன்படுத்தி நாம் இதில் முதலீடு செய்யலாம். இதுவே சென்ற ஆண்டைவிட இந்த வருடம் விற்பனை குறைந்து வரவு குறைந்து இருந்தால் ஏற்கனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களும் வெளியேற வாய்ப்பு இருக்கும், இதனால் இவர்களின் பங்கு விலை கணிசமாக இறங்கும், இந்த நேரத்தில் இங்கு முதலீடு செய்வது நஷடத்தை ஏற்படுத்தும்.

2.பொருட்கள் வர்த்தகம்:

பொருட்கள் வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி. அலுமினியம், பித்தளை, தாமிரம், ஈயம், நிக்கல், துத்தநாகம். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு. கருப்பு மிளகு, ஏலக்காய், ஆமணக்கு விதை, பருத்தி, கச்சா பாமாயில், மெந்தா எண்ணெய், பாமோலின், ரப்பர் போன்றவைகளில் அடங்கும். இதைப் பொறுத்தவரையில் பல நாடுகளின் செயல்பாட்டை வைத்து விளைநிலவரம் மாறுபடும். பொருட்கள் வர்த்தகத்தில் லாபம் அதிகம் கிடைத்தாலும் மிகவும் ஆபத்தானதாகப் பலராலும் கருதப்படுகிறது.

பொருட்கள் வர்த்தகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற போக்குவரத்தினை அடைப்படையில் விலை மாற்றம் நடக்கும், இறக்குமதி செய்யக்கூடிய நாட்டில் இயற்க்கை சீற்றம் ஏற்பட்டால் போக்குவரத்து தடைபடும், இதனால் ஏற்றுமதியும் நிற்கும், பலரும் வேலைவாய்ப்பை இழக்க கூடும், இது போன்ற காரணிகளால் கூடப் பொருட்கள் வர்த்தகத்தில் விலைகள் மாறுமாடலாம்.

3.நாணைய வர்த்தகம்:

நாணைய வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டின் நாணைய விலையைப் பொறுத்து மற்றொரு நாட்டின் நாணைய விலை மாறுபடும். பெரும்பாலும் அதிகமாக அமெரிக்க டாலுருக்கு நிகரான அந்நிய செலாவணி வர்த்தகம் தான் பரிமாற்றம் செய்யப்படுகிறது, இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் INRக்கு நிகரான மற்ற ஒரு சில நாடுகளின் நாணயங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. குறிப்பாக USDINR, EURINR, GBPINR மட்டும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இவற்றில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.

4.குறியீட்டு வர்த்தகம்:

ஆங்கிலத்தில் IndexTrading என்று கூறுவார்கள், உதாரணமாக இந்திய பங்கு சந்தையில் Nifty50, Bank Nifty போன்ற முக்கிய குறியீடுகளில் குறியீடுகள் உள்ளது, முக்கியமான 50 நிறுவங்களை மட்டும் எடுத்து அதற்க்கு ஒட்டுமொத்த குறியீடாக Nifty50 என்று குறிப்பிடுவார்கள், அந்த 50 நிறுவங்களின் ஒட்டுமொத்த ஏற்ற, இறக்கங்களைக் கொண்டு Nifty50 மதிப்பாய்வு செய்யப்படும். இதிலும் நல்ல லாபம் கிடுக்கக்கூடும். இவற்றில் நாம் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது என்றால்?. உங்களின் தரகர்களிடம் நீங்கள் டீமேட் கணக்கு திறக்கும்போது Option மற்றும் Future Trading செய்வதற்கான கணக்கைத் திறந்தாள் மட்டும் தான் குறியீடுகளில் வர்த்தகம் செய்ய முடியும்.

பங்குச் சந்தையை எவ்வாறு புருந்திக்கொள்வது

மேலே கூறியது போன்று இந்த ஒவ்வொரு பொருள்களுக்கும் ஒவ்வொரு நியமிக்கப்பட்ட சந்தைகள் இருக்கிரது, மக்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை தேடி வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற காலம் போய்விட்டது, இந்தக் காலக்கட்டத்தில் அனைத்தும் Online மூலம் செய்யத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக Amazon, Flipkart போன்று இவர்கள் பொருட்களை விற்பவர்களையும் மற்றும் வாங்குபவர்களையும் ஒன்றிணைக்கின்றனர். இதே போன்று முதலீடு செய்பவர்களையும் மற்றும் முதலீட்டுக்காகப் பங்குச்சந்தைக்கு வந்த பொது நிறுவனங்களையும் தரகர்கள்மூலம் பங்குப் பரிவர்த்தனை செய்ய ஒன்றிணைகின்றனர்.

ஒரு கடைக்குப் இரண்டு நபர்கள் வருகிறார்கள், அவர்கள் இருவரும் ஒரு கிலோ தக்காளி வேண்டுமென்று கேட்க்கிறார்கள், ஆனால் கடையில் இருப்பதோ ஒரு கிலோ தாக்களிமட்டும் தான், அதன் விலையோ 25ரூபாய், இந்த இரண்டு நபர்களில்  ஒருவரிடம் 25ரூபாய் இருக்கிறேது ஆனால் மற்றோருவரிடம் 30ரூபாய் இருக்கிறது, இதில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்தத் தக்காளி போய்ச் சேரும். அதே போன்று தான் பங்கு சந்தையும் செயல்படுகிறேது.

பங்கு சந்தையைப் பொறுத்தவரையில் பங்குகளை வாங்கி விற்கலாம் அல்லது விற்று வாங்கலாம். இங்கு வாங்கும்போது ஒரு விளையும் மற்றும் விற்கும்போது மற்றொரு விளையும் இருக்கும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதிக நபர்கள் விற்கும்போது அதன் விலை கணிசமாகக் குறையும், அதேவே அதிக நபர்கள் வாங்கும்போது கணிசமாக உயரும்.

பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது

பங்குச் சந்தை பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை நமக்கு வழங்குகிறது. இங்குக் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அனைத்தும் செயல்படுகிறது. பங்கு சந்தையைப் பொறுத்தவரையில் முதன்மை சந்தை(primary markets) மற்றும் இரண்டாம் நிலை சந்தை(secondary markets) என்று பிரிக்கலாம்.

முதன்மை சந்தை(Primary Markets)

ஒரு நிறுவனம் முதன் முதலில் அவர்களின் முதலீட்டைப் பெருக்குவதற்கு பொதுமக்களிடம் அறிமுகம் செய்யும் இடம்தான் முதன்மை சந்தையாகும். ஒரு நிறுவனம் முதன் முதலாகப் பங்குச் சந்தைக்கு நுழையும்போது கட்டாயமாக IPO என்று சொல்லக்கூடிய initial public offerings மூலம் தான் பங்குச் சந்தைக்கு வர வேண்டும்.  இந்தியாவை பொறுத்தவரையில் IPO-ல் வெளியீடும் நிறுவங்களின் பங்குகளை ஒரு முதலியிட்டாளர் Rs.15000 முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதற்கேற்ப நிறுவங்களின் மூலதனத்திற்கு ஏற்ப ஒரு பங்கின் விலையைத் தீர்மானிப்பார்கள்.

உதாரணமாக 15 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கிற்கு 60ரூபாய் எனத் தீர்மானித்து 25லட்சம் பங்குகளாக மக்களுக்கு அறிமுகம் செய்வார்கள். ஒவ்வொரு தனிநபரும் அந்த IPO-வை வாங்க வேண்டும் என்றால் 15000ரூபாய் வைத்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் 250 பங்குகளை அவர்கள் வாங்க வேண்டும். IPOவை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவராலும் பெற முடியும். ஆனால் அதனை விற்பதற்கு டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை சந்தை(secondary markets)

IPO காலத்திற்கு பிறகு அந்த நிறுவனங்களின் பங்குகள் அனைத்து இரண்டாம் நிலை சந்தைக்கு வருகிறது, இங்கு டீமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் மற்றும் விற்கவும் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு முறை பங்குகளை வாங்கி விற்கும் போதும் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இரண்டாம் நிலை சந்தையைப் பொறுத்தவரையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் எந்த அளவுக்கு லாபம் கொடுக்கிறதொ அதற்க்கேற்ப அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு கூடுதல் பங்குகளையோ அல்லது சலுகைகளையோ அந்த நிறுவனம் கொடுக்கலாம்.

Latest news
Related news

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here