ஸ்டாக் ப்ரோக்கர்களை எவ்வாறு தேர்வு செய்வது?

ஸ்டாக் ப்ரோக்கர்களை எவ்வாறு தேர்வு செய்வது?

பங்குச்சந்தைக்கு நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது முதன்முதலில் பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவராகவும் இருந்தால், நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது ஸ்டாக் ப்ரோக்கர்களை பற்றிதான். ஏனென்றால் இவர்களிடம் மட்டும்தான் நாம் டீமேட் கணக்கு திறக்க முடியும். டீமேட் கணக்குபற்றிச் சென்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். இந்தப் பதிவில் எவ்வாறு சரியான ஸ்டாக் புரோக்கர்களை தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

How to select best stock brokers in india 2021

பங்குச்சந்தைக்கு புதிதாக வருபவர்களுக்கு யாரும் சரியான வழிகாட்டுதலை கொடுப்பதில்லை. இதனால் அவர்கள் மூன்றுக்கும் அதிகமான பங்கு தரகர்களிடம் டீமேட் கணக்கு தொடங்குகின்றார்கள். இதற்காக ஒவ்வொரு தரகர்களுக்கும் நீங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் டீமேட் கணக்கைத் திறக்கும்பொழுது, கணக்கு திறப்பதற்கான கட்டணத்தை அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டியது இருக்கும். தேவை இல்லாத இந்த வகையான கட்டணங்கள் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் சரியான தரகர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Basic Stock Brokers:

நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, நீங்கள் தெரியாமல் ஒரு பங்கு தரகரிடம் கணக்கைத் தொடங்கிவிட்டாள் அதை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்கு தரகரிடம் டீமேட் கணக்கைத் தொடங்கி கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் உங்களிடம் தேவை இல்லாமல் இருக்கும் டீமேட் கணக்கில், ஏற்கனவே வாங்கி வைத்துள்ள பங்குகளை, இன்னொரு பங்கு தரகரிடம் நீங்கள் தொடங்கியிருக்கும் டீமேட் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இது போன்று தரகர்கள் மாற்றிக் கொண்டு இருப்பதை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால் இதற்கு அதிகமான செலவுகள் ஆகக்கூடும். அதுமட்டுமில்லாமல் இதற்காகத் தேவையற்ற இடையூறுகளும் மற்றும் நேரமும் உங்களுக்கு வீணாகக்கூடும். அதற்குப் பதிலாக நீங்கள் முதன்முதலில் டீமாட் கணக்கு தொடங்கும்போது சரியான தரகரைத் தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும். மேலும் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு இரண்டு வகையான கணக்கு தேவைப்படும். ஒன்று டீமேட் கணக்கு மற்றொன்று வர்த்தக கணக்கு.

வர்த்தக கணக்கு என்பது நீங்கள் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க நினைத்தாலும் அவற்றை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க பயன்படுகிறது. டீமேட் கணக்கு என்பது நீங்கள் வாங்கிய பங்குகளைச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது.

ஸ்டாக் ப்ரோக்கர்களை தேர்வு செய்யும் முன் செய்யவேண்டியது:

இந்தியாவில் நீங்கள் ஒரு பங்கு தரகரைத் தேர்வு செய்வதற்கு முன்பு உங்களுக்குத் தெரிந்த பங்கு முதலீட்டாளர்களிடம் சில வழிகாட்டல்களை பெற்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் அவர்கள் கூறும் அனைத்தையும் கண்மூடித்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. மேலும் உங்களின் சுய ஆராய்ச்சியினை சற்று ஆன்லைனில் செய்து பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். ஆன்லைனில் நீங்கள் ஆராய்ச்சி செய்யும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது, தரகர்களிடம் கணக்கு திறக்கும் கட்டணம் மற்றும் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் வசதிகள்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குதாரர்களைப் பற்றி நீங்கள் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பரிமாற்று கட்டணங்கள் மற்றும் ஆண்டு பராமரிப்பு செலவுகள், அவர்களின் வர்த்தக தளங்கள் மற்றும் உங்களுக்கு உதவிகள் தேவைப்படும்பொழுது உங்களது மொழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில முக்கியமானவைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தரகரின் நற்பெயர்கள்:

நீங்கள் ஒரு பங்குதாரர்களிடம் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பு அவர்களைப் பற்றி மக்களிடம் எது போன்ற கருத்து இருக்கிறது என்பதனை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவர்கள் எவ்வளவு காலமாகப் பங்குத் தரகு நிறுவனம் வைத்துள்ளார்கள் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்களின் நிறுவனத்தின் வயது எவ்வளவு காலம் என்பதனை பொறுத்து மட்டும் தான் அவர்களின் சலுகைகளும் மற்றும் உதவிகளும் கிடைக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் உங்களின் சமூக வலைதளங்களின் மூலமாகவே பங்குதாரர்களைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக அவர்களின் ஆண்ட்ராய்ட் Appகளை நீங்கள் பயன்படுத்த நினைத்தால் கூகுள் பிளே ஸ்டோரில் அவர்களுக்கான மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதனை கவனியுங்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களைப் பற்றி அங்கு வாடிக்கையாளர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதனையும் படித்துப் பாருங்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் பயன்படுத்தப்படும் தரகர்களைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்? கூகுள் பிளே ஸ்டோரில்   நீங்கள் அவர்களின் App  பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு எத்தனை வாடிக்கையாளர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதனை வைத்தும்கூட அவர்களின் உண்மை தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

கட்டணங்கள்:

நீங்கள் எந்தப் பங்கை வாங்க நினைத்தாலும் ஸ்டாக் ப்ரோக்கர் மூலம் மட்டும்தான் பங்குகளை வாங்க மற்றும் விற்க முடியும். இதற்காக நீங்கள் அவர்களுக்குத் தரகு கட்டணம் என்று ஒன்றை செலுத்த வேண்டும் இது தரகர்களுக்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டே இருக்கிறது. பங்குதாரர்களைப் பொறுத்தவரை மூன்று வகையான பங்குதாரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். வங்கி பங்குத் தரகர்கள், முழு தள்ளுபடி தரகர்கள் மற்றும் தள்ளுபடி தரகர்கள்.

இதில் நீங்கள் பார்க்க இருப்பது முழு தள்ளுபடி தரகர்கள். இவர்களிடம் நீங்கள் டீமேட் கணக்கைத் திறக்கும்பொழுது உங்களுக்கு ஏராளமான சலுகைகளை அவர்கள் கொடுக்கின்றார்கள். உதாரணமாக நீங்கள் அவர்களின் கிளைக்கு நேரடியாகச் சென்று உதவிகளைப் பெற முடியும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்குப் போன் மூலமாகவே எந்தப் பங்கை வேண்டும் என்று சொன்னாலும் அதை அவர்கள் வாங்கி உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுமட்டுமில்லாமல் பங்குச்சந்தை பற்றிய அன்றாட நிகழ்வுகளை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் அவர்கள் கொடுத்து உதவுவார்கள். இது போன்ற சலுகைகளைக் கொடுப்பதன் காரணமாக அவர்கள் அதிகமான தரகு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

வங்கி பங்குத் தரகர்கள் என்பவர்கள் முழு தள்ளுபடி தரகர்களுக்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாகவும் கட்டணங்களை வசூலிக்கக்கூடும். உதாரணமாக உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஆக்ஸிஸ் பேங் மூலமாகக் கூட நீங்கள் டீமேட் கணக்கைத் திறக்க முடியும். ஏனென்றால் இது போன்ற பெரிய வங்கிகள் பங்கு வர்த்தகம் செய்யக்கூடிய வசதியையும் செய்து கொடுக்கின்றார்கள். நாம் இறுதியாகப் பார்க்க இருப்பது தள்ளுபடி தரகர்கள், இவர்கள் உங்களுக்கு வர்த்தகம் செய்வதற்கான வசதி மட்டுமே செய்து கொடுப்பார்கள் மற்றபடி அவர்களிடமிருந்து உங்களுக்கு எந்த விதமான உதவியும் கிடைக்காது. இதனால் மிகக்குறைவான தரகு கட்டணத்தை மட்டுமே இவர்கள் வசூலிக்கிறார்கள்.

முழு தள்ளுபடி தரகர்கள் நீங்கள் செய்யக்கூடிய தினசரி வர்த்தகத்திற்கு மட்டும் கட்டணத்தை வசூலிப்பார்கள் மற்றபடி நீங்கள் முதலீடு போன்ற நீண்ட நாள் வர்த்தகம் செய்தால் அதற்கென்று குறைவாகவோ அல்லது எந்த ஒரு கட்டணமும் இன்றியே செயல்படுத்தி கொடுக்கின்றார்கள். ஆனால் தள்ளுபடி தரகர்களிடம் இது போன்ற சலுகைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த மூன்று வகையான தரகர்களிடம் எவற்றில் கணக்கைத் தொடங்க வேண்டும் என்பதனை நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

பங்குச் சந்தை கற்பித்தல்:

ஒரு சில தரகர்கள் முதன்முதலில் பங்குச்சந்தைக்கு வருபவர்களுக்குப் பங்குச்சந்தை என்றால் என்ன அவற்றில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றிய அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இது போன்ற தரகர்களை நீங்கள் அணுகும்பொழுது உங்களுக்குப் பங்குச் சந்தைப் பற்றிய போதிய அறிவு இல்லாமல் இருந்தாலும் அவற்றை அவர்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் நீங்கள் எந்தப் பங்கை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்பது போன்ற அறிவு உங்களுக்குக் கிடைத்துவிடும்.

வர்த்தக தளங்கள்:

நீங்கள் எந்த வகையான ஸ்டாக் புரோக்கர்களிடம் டீமேட் கணக்கைத் தொடங்கினாலும் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் வர்த்தக தளங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும். ஒவ்வொரு தரகர்களும் வர்த்தகம் செய்வதற்கு என்று மொபைல் அப்ளிகேசன்ஸ், கணினி மற்றும் லேப்டாப் மூலமாகவும் செயல்படுமாறு சாப்ட்வேர்கள் இலவசமாகக் கொடுப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நேரடியாக அவர்களின் வலைதளத்திற்கு சென்று வர்த்தகம் செய்துகொள்ள முடியும். இவற்றில் நீங்கள் பயன்படுத்தச் சாப்ட்வேர்களும் மொபைல் அப்ளிகேஷன் ஆகியவை எவ்வாறு செயல்படுகிறது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்றால் நீங்கள் வர்த்தக  நேரங்களில் அவற்றைப் பயன்படுத்தும்பொழுது சில தொழில்நுட்ப பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள் சரியான நேரத்தில் சரியான பங்கில் முதலீடு செய்வதை அது தடுக்கக்கூடும். எனவே நீங்கள் எந்தத் தரகர்களிடம் கணக்கு தொடங்கினாலும் அவர்களின் வர்த்தக தளங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை அறிந்து கொள்வது அவசியமாகும்.

பணம் திரும்பப் பெறுதல்:

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாகப் பங்குச் சந்தையில் அந்தப் பணத்தை செயல்படுத்த முடியாது. உங்களுக்கு என ஒரு வர்தகர்களிடம் டீமேட் கணக்கைத் தொடங்கி அவர்களிடம் மட்டும் உங்களது பணத்தை முதலீடு செய்ய முடியும். அவர்கள்மூலம் மட்டும்தான் நீங்கள் வாங்க நினைக்கும் பங்குகளை வாங்கவும் மற்றும் விற்கவும் முடியும் இதனால் நேரடியாக நீங்கள் புரோக்கர்களிடம் தொடர்பு வைத்துள்ள காரணத்தினால் உங்களின் டெபாசிட் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் மிக எளிமையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்குள் உங்களது பணம் உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்து விட வேண்டும். இது போன்ற தரகர்களை நீங்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது மிக அவசியம். அது மட்டுமில்லாமல் ஒரு சில தரகர்கள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

வர்த்தகம் செய்வதற்கான கருவிகள்:

புரோக்கர்களின் வர்த்தக தளங்களில் நீங்கள் பங்குகளை வாங்கும் பொழுதும் மற்றும் விற்கும் பொழுதும் ஒரு சில தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். அதற்கென ஒரு சில கருவிகளை அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் தளங்களில் இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பங்கின் முழு விவரம் உங்களது தொழில்நுட்ப ஆராய்ச்சியின் படி அந்தப் பங்கின் விலை ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்பதனை ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும். எனவே நீங்கள் வர்த்தகம் செய்யக்கூடிய தரகர்களிடம் அவர்கள் கொடுக்கும் கருவிகள்பற்றி முதலில் கேட்டுத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

AliceBlue:

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தரகர்களிடம் நாங்கள் டீமேட் கணக்கைத் தொடங்கி வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் குறைவானதாகக் கட்டணங்களை மட்டும் வசூலிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் உதவிகளும் வாட்ஸ்அப் மற்றும் போன்கால் மூலம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் வர்த்தக தளங்கள் வேகமாகச் செயல்படுவதுடன் எந்த இடையூறுமின்றி வர்த்தகம் செய்வதற்கான கருவிகளும் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. இவர்களிடம் நீங்கள் டீமேட் கணக்கைத் தொடங்க விரும்பினால் முதலில் இவர்களின் வலைதளத்திற்கு சென்று இவர்கள் கொடுத்திருக்கும் உதவி எண்ணிற்கு கால் செய்து அல்லது உங்கள் அருகாமையில் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து அதன் பிறகு நீங்கள் டீமேட் கணக்கைத் தொடங்கலாம்.

Share